Saturday, June 15, 2013

Eriyum Panikkadu Book - எரியும் பனிக்காடு

Eriyum Panikkadu. Rs.150. Buy Eriyum Panikkadu Books, எரியும் பனிக்காடு. Author - P.H.Daniel, Publisher - Vidiyal. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.comhttp://www.myangadi.com/eriyum-pannikkadu-vidiyal

Book Description:

ஆனைமலைக் காடுகளில் தழைந்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்
...நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்....
- ஆதவன் தீட்சண்யா

உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் 'ரெட் டீ' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து முதல் முதலாக 'எரியும் பனிக்காடக'த் தமிழுக்கு வருகிறது.

இன்றைய எழில்மிகுந்த மலை நகரங்களையும், அன்னியச் செலாவணியை அள்ளித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங்கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்த கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை தான் 'எரியும் பனிக்காடு'.

தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது 'எரியும் பனிக்காடு'.

பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் தான் இந்நவீனமாக உருப்பெற்றன.

இன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை   முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.

இலக்கியத் தளத்தில் தலித் இலக்கியத்திற்கும், பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கும் இடையிலான கற்பனையான லக்ஷ்மன் ரேகைகள் மறைந்து, இரண்டும் ஒன்றிணையும் புள்ளியாகவும் இருக்கிறது 'எரியும் பனிக்காடாக' வெளிவரும் 'ரெட் டீ'.

தமிழில் உர்ய்ப்பெற்று வரும் தலித் இலக்கியத்திற்கும், பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கும் 'ரெட் டீ' ஓர் உன்னதமான தொடக்கம் என்பதை உணர்ந்து கொள்ளும் போது தமிழிலக்கியத்தின் எல்லைகள் விரிந்து பரவும்.

No comments:

Post a Comment