Saturday, June 21, 2014

போஜராஜன்

போஜராஜன்

 Author: M.Srinivasan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI513

To Buy - http://www.myangadi.com/bojarajan-vikatan-publications

வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன்.
எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன்.

மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



பொன்னியின் செல்வன் (5 பாகங்கள் - விகடன்)

பொன்னியின் செல்வன் (5 பாகங்கள் - விகடன்)

 Author: Kalki 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI478

To Buy - http://www.myangadi.com/ponniyin-selvan-vikatan-publications

பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஊர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம்.

சரித்திரத்தையும், கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான 'பொன்னியின் செல்வன்', தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு - அருகில் இருந்தே பார்த்தது போல் நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல!

சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்சினைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று.

ஒலியும் ஒளியும் போல... எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளி கூட விட்டுக் கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம் அவர்கள். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவர்களின் புதல்வர் - ஓவியர் ம.செ!

நெகிழ்ச்சியின் உச்சத்தில் இந்த பணிக்குத் தமது ஆசிகளை அளித்து தொகுப்பின் சிறப்பைக் கூட்டியிருக்கிறார் அமரர் கல்கி அவர்களின் புதல்வர் 'கல்கி' கி.ராஜேந்திரன் அவர்கள்.

பேனா மன்னரின் வாரிசுக்கும், தூரிகை மன்னரின் வாரிசுக்கும் மனமார நன்றி சொல்லி... வாருங்கள், சரித்திரத்தை புத்தம் புதிதாகப் புரட்டிப் பார்ப்போம்.

அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன்... ஓவியர் அமரர் மணியம் தீட்டிய வண்ண ஓவியங்களுடன்... விகடன் வெளியீட்டில் இருந்து உங்களுக்காக!!!



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



பொதுத் தமிழ் களஞ்சியம்

பொதுத் தமிழ் களஞ்சியம் 

 Author: Dr.Sankar Saravanan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI196

To Buy - http://www.myangadi.com/pothu-thamizh-kalanjiyam-vikatan-publications 




Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

 Author: Thooran Nambi 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI210

To Buy - http://www.myangadi.com/paisa-selavillamal-pasumai-puratchi-vikatan-publications
 விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



 

Thursday, June 19, 2014

பெஸ்ட் பாலிசி..வாழ்க்கை ஈஸி!

பெஸ்ட் பாலிசி..வாழ்க்கை ஈஸி!

 Author: Vasu Karthi 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI455

To Buy - http://www.myangadi.com/best-policy-vaazhkai-easy-vikatan-publications 
 எந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், அவசரக் காலங்களில் கைகொடுக்கும் தோழனாக காப்பீட்டு பாலிசிகள் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது மிக முக்கியம். அதிலும் குடும்ப வருமானத்துக்கு முழு ஆதாரமான நபர் என்றால், காப்பீடு அதிமுக்கியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம்? எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது? எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும்? என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா? என்பது போன்ற நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை எளிமையான நடையில், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சில சம்பவங்களின் உதாரணங்களோடு எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. இதுவரை காப்பீடு பாலிசிகளின் சேவைகளையும் தேவைகளையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட, தங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com