Sunday, June 8, 2014

தமிழ்நாட்டின் கதை

தமிழ்நாட்டின் கதை

 Author: Arunagiri 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI499

To Buy - http://www.myangadi.com/thamizhnattin-kathai-vikatan-publications


தஞ்சம் என வந்தோரையும், இங்கு பிறக்கும் பேறு பெற்றோரையும் தலை நிமிரச்செய்யும் தமிழ்நாடு, இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. எண்ணிலடங்கா தமிழர்களையும், தரமான தலைவர்களையும், கண்ணியம் கலந்த கட்டுப்பாடு மிகுந்த கட்சிகளையும், மக்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாட்டு அரசியல் பின்னணிகளையும், கடந்து வந்த தடங்களையும் பார்த்துப் பெருமை பொறாமைகொள்ளும் பிற மாநிலங்கள் இன்று அநேகம். உலக மேடையில் அரங்கேறும் பல்வேறு நிகழ்வுகளை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். 


ஆனால், பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் தமிழ்நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நமக்கு எப்போதாவது தோன்றி உள்ளதா? அப்படியே தோன்றினாலும் அதனைக் குறித்த சரியான தகவல்கள் எங்குக் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும், கிடைக்கும் தகவல்கள் உண்மையானதா என்பது போன்ற மனச் சிதறல்களுக்கு இதுவரை நாம் ஆளாகி வந்ததுதான் மிச்சம். இனி, தமிழனுக்கு மட்டுமல்லாமல், சிந்தனையில் தரமும், உடலில் உரமும் உள்ள அனைவருக்கும், “உங்களின் திறமைக்கான வழித்தடமாக நான் இருக்கிறேன். என்னைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, உங்களின் அறிவுத்திறனை இந்த உலகுக்குக் காட்டுங்கள்!” என்று நம்மை வரவேற்கிறது, தன்னிகரில்லா மாநிலமான தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் பூர்வீக தோற்றம் முதல், இன்றைய சமூக, அரசியல் கட்சிகளுக்கான பின்னணி, தமிழக அரசியல் களம், இந்தியக் கட்சிகள், ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கங்கள், மதச்சார்பு இயக்கங்கள், தமிழகத்தில் முன்பு இயங்கிய கட்சிகள், தமிழ்நாட்டு அரசியலை உலுக்கிய நிகழ்வுகள் வரை அரசியல் அதிரடி நிகழ்வுகளை வரிசைப்படி தொகுத்துள்ளார் நூலாசிரியர். மேலும், எந்தக் கட்சி எப்போது உதித்தது, அதன் அரசியல் செயல்பாடுகள் என்ன, மக்களுக்கு ஆற்றியப் பணிகள் என்ன, இவற்றின் மூலம் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்பது போன்ற பல்வேறு வகையான தகவல்கள் அடங்கிய உண்மைத் தகவல்களை சுவாரஸ்யமான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வாளர்கள் என வரலாற்றின் மீது தணியா தாகம் கொண்ட வாசகர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும், தமிழ்நாட்டின் குறிப்புகளை எடுத்துச்சொல்லும் ஒரு கையேடாக இந்த நூல் விளங்கும் என்பது திண்ணம்.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



No comments:

Post a Comment