Thursday, June 5, 2014

ஜெயம்

ஜெயம்

 Author: Devdad Patnayak (Charukesi, Tam) 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI114

To Buy - http://www.myangadi.com/jeyam-vikatan-publications

இது மகாபாரதக் கதைதான். ஆனால், ஒவ்வொரு பகுதி முடிந்ததும் நூலாசிரியர் தனது கருத்துகளைத் தனியாகவும் எழுதியிருக்கிறார். சுவையாகவும், ஆச்சர்யமாகவும், அபூர்வமாகவும், நமக்குத் தெரியாத புது விஷயமாகவும், திடுக்கிடும்படியும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் எழுதியிருக்கிறார். பொதுவாக சொல்லப்படும் மகாபாரதம் கதை நம் எல்லோருக்கும் தெரியும். 

ஆனால், தமிழ்நாட்டில், சில வட்டாரங்களில் வாய்வழியாக உலவும் மகாபாரதத்தின் கதைகளோடு, இந்தியாவின் பல மாநிலங்களில் மாறுபட்டு சொல்லப்படும் கதைகளையும் கேட்டு இந்த நூலில் தொகுத்து எழுதியிருக்கிறார் தேவ்தத் பட்நாயக். நமது கிராமங்களில் சொல்லப்படும், நமக்குத் தெரியாத பல கிளைக் கதைகளையும் தொகுத்துத் தந்திருக்கிறார். சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் நடந்த மகாபாரதக் கதை, எப்படியெல்லாம் கால ஓட்டத்தை வென்று நிற்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது இந்தக் கதைகள்.

நதி நீரிலிருந்து ஆளுக்கு ஆள் அள்ளிப் பருகிய பின்னர், அந்த நதியிலேயே தளும்பி இருக்கும் நீர் மேலும் பாய்ந்து ஏரி, குளம், கடல் என்று கலந்துவிட்டாலும், மூல நதி மட்டும் மாறாமல் இருப்பது போல, இத்தனை நூற்றாண்டுகளாக மகாபாரதத்தை அனைவரும் தன் மனம் போன போக்குக்குத் தொட்டு இழுத்தாலும் ‘இறைவனின் கவிதை’ ஆனதால் சிதைவுறாமல் உயர்ந்து நின்று இந்திய கலாசாரத்துக்குப் பெருமை சேர்க்கிறது. இது புராணக் கதை என்பதைவிட நடந்த வரலாறாக இருக்கலாம் என்ற கோணத்தில் எடுத்துரைப்பதுதான் இந்த நூலின் சிறப்பு. ‘JAYA - AN ILLUSTRATED RETELLING OF THE MAHABHARATA’ என்ற ஆங்கில நூலை அழகாகவும் எளிமையாகவும் தமிழாக்கம் செய்திருக்கிறார் சாருகேசி.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



No comments:

Post a Comment