Tuesday, June 17, 2014

பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள்

Author: Vivekshankar 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI238

To Buy - http://www.myangadi.com/bharathathin-batha-kavigal-vikatan-publications 
 இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சாத மன வல்லமையைத் தருவது. பக்தி, வாழ்வில் எதற்காக வேண்டும்? மன நிம்மதிக்குத்தான். சொல்லப்போனால் இந்த நிம்மதியைப் பெறத்தான் மானுடமே இவ்வளவு கூத்துகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாம் இசை வல்லுனர்களைப் பார்த்திருக்கிறோம். புலவர்களைப் பார்த்திருக்கிறோம். பக்திப் பரவசத்தில் ஊனுருக நின்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் ஒன்றாகத் தேனில் கலந்து இறைவனுக்குப் படைத்து, பின் புசிப்பதுபோல இசையும் புலமையும் பக்தியும் ஒன்றாகச் சேர்ந்த திருவருட் செல்வர்களான பக்த கவிகளை இந்நூலில் காண்கிறோம்.

பக்த கவிகள் என்போர், இறைவன் மேல் பக்திமேலீட்டால் கவிதைகளைப் புனைந்தும் இசையால் ஏத்தியும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துகாட்டியவர்கள். நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர்கள். இன்றைக்கு, ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்றால் என்ன? என்று கேட்டால் சின்னக் குழந்தையும் அர்த்தம் சொல்லும். 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



No comments:

Post a Comment