Saturday, June 15, 2013

Kadal Pura Book by Sandilyan - கடல் புறா

Kadal Pura Pagam 1 to 3. Rs.545.  Buy Kadal Pura Pagam 1 to 3 Book, Author - Saandilyan. All India Free Home Delivery.

Buy @ MyAngadi.comhttp://www.myangadi.com/kadal-pura-pagam-1-to-3-vanathi-pathipagam

Book Description

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது, அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து , அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை , தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.

கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்கரகளிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான்.மஞ்சளழகி அவனிடம் காதல் வயபடுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.
பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைகரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் . ஸ்ரீவிஜயத்தை கைப்பற்றி சோழ புலிக்கொடியை பறக்கவிடுகிறான் . போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி.1063-வது வருஷத்திலிருந்து 1070-ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ'. இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும். இந்தத் தகவல்களிலிருந்தும், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும், பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்தனர். அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசிரியரின் ஆசையின் விளைவுதான் 'கடல் புறா'.

No comments:

Post a Comment