பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி
Author: Thooran Nambi
Publisher: Vikatan Publications
Product Code: MAVI210
To Buy - http://www.myangadi.com/paisa-selavillamal-pasumai-puratchi-vikatan-publications

விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது.
பணம்கொட்டும் பண்ணைத் தொழில்கள்
Author: R.Kumaresan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI200
To Buy - http://www.myangadi.com/panam-kottum-pannai-thozhilgal-vikatan-publications

இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரான வருமானமோ கிடைப்பதில்லை. வறட்சி, வெள்ளம், காற்று என்று இயற்கையின் பாதிப்பாலும், பூச்சி, புகையான், வண்டு போன்ற நோய்த் தாக்கு தலாலும், ஆள் பற்றாக்குறையாலும், உற்பத்திக்கு ஏற்ப விலை கிடைக்காமலும் விவசாயத் தொழில் நசிந்து வருகிறது.
உரிய வாழ்வும் வளர்ச்சியும் இல்லாததால், விவசாய வேலை செய்தவர்கள் வாழ வழி தேடி, நகரங்களில் கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலை செய்தல், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் புரிதல் என்று ஊர் ஊராக பெரும் நகரங்களுக்கு இடம்பெயர்வதும் கண்கூடு. அப்படிப்பட்டவர்களுக்கு, சிறு முதலீட்டில் தங்கள் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை-வசதியை அமைத்துக்கொள்ள இந்த நூல் எடுத்துச் சொல்கிறது. தேனீ, காடை, புறா, வாத்து, வான்கோழி, கின்னிக் கோழி, காளான் என்று இவற்றை வளர்ப்பதை, பொழுதுபோக்காக, விளையாட்டாக, மனது லயித்து இந்த வேலைகளைச் செய்யலாம். வருமானத்தையும் ஈட்டலாம். அதோடு தாங்களே தொழிலதிபராக இருக்கலாம். அதற்கு வழிகாட்டும் மகத்தான நூல் இது!
பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்
Author: Pon.Senthilkumar
Publisher: Vikatan Publications
Product Code: MAVI205
To Buy - http://www.myangadi.com/panam-kozhikkum-vivasaya-thozil-nutpangal-vikatan-publications

‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கிற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. விவசாயத் தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகினாலும், அதனை எத்தனை பேர் மேற்கொள்கிறோம் என்பது கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகளையும், விவசாய ஆக்கப்பூர்வங்களையும், மாற்று விவசாயத் திட்டங்களையும் நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம்? ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை!’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில்! இலட்சியமாகவும் லாபகரமாகவும் விவசாயத்தை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் அற்புதமான தகவல் பெட்டகமாக இந்த நூல் பலன் கொடுக்கும்.
நெல்
Author: Kaasi.Vembaiyan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI483
To Buy - http://www.myangadi.com/nel-vikatan

மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
ஆம்! பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.
நீங்கள் கேட்டவை
Author: Pura Pandy
Publisher: Vikatan Publications
Product Code: MAVI217
To Buy - http://www.myangadi.com/neengal-kettavai-vikatan-publications

உழவுத்தொழிலில் என்ன கேள்விகள் இருக்கப்போகிறது...? என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம்... மனித நாகரிகத்தின் தொடக்கமே உழவுதான்! எனவே, மற்ற பல துறைகளைப் போலவே வேளாண்மையிலும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. வாசகர்கள் கேட்கும் உழவுத் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு... அனுபவம் வாய்ந்த உழவர்கள், உரிய நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் என்று பல தரப்பிலிருந்தும் ஆதாரபூர்வமான _ தெளிவான பதில்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் நோக்கத்துடன் பசுமை விகடன் இதழில் தொடங்கப்பட்டது நீங்கள் கேட்டவை பகுதி. பதில்களைப் படித்துவிட்டு, அவை குறித்து மேலும் தகவல்கள் பெறுவதற்கு வசதியாக பதில் சொல்பவர்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன. அப்படி பசுமை விகடன் இதழ்களில் வெளியான கேள்வி _ பதில்களது தொகுப்புதான் இந்த நூல். விவசாய வாசகர்களது கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து கச்சிதமான பதில்களைப் பெற்றுத் தொகுத்திருக்கிறார் புறாபாண்டி (ஆத்தூர் செந்தில்குமார்). வேளாண்மை தொடர்பான கேள்விகள் பலவற்றுக்கு இந்த நூலில் விரிவான பதில்கள் உள்ளன.