தலையணை மந்திரம்
Author: S.K.Murugan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI355
To Buy - http://www.myangadi.com/thalaiyanai-manthiram-vikatan-publications

மந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத் திகழ்கிறது. அதுதான் தலையணை மந்திரம். தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே. ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே தருகிறது இந்த நூலின் தலைப்பு! தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம் & அவர்களின் தனிமை நேரமே. அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அன்யோன்யமான உரையாடலே தலையணை மந்திரம். அந்த ஏகாந்த நேரத்தில் அன்யோன்யத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்; அன்யோன்யம் வளர வளர எப்படி தாம்பத்யத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்; தாம்பத்யத்தில் லேசாக விரிசல் நேரும்போதே அதை எப்படி நேராக்கிக் கொள்வது; தாம்பத்யத்துக்கான சோதனைக் களனான ஊடல் ஏற்படும் நேரங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்... ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது. தாம்பத்யம் எனும்போது உள்ள உறவு மட்டும்தானா, உடல் உறவு இல்லாமலா? அது இல்லாமல் வாழ்க்கை இல்லையா?
காதல் வாழ்க
Author: Madhan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI352
To Buy - http://www.myangadi.com/kadhal-vaazhga-vikatan-publications

மனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும்; எவரையும் சுற்றும். இரு மனங்களும், நான்கு கண்களும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் ‘காதல்’. இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம் வரை, காதல் என்கிற வார்த்தைதான் உலகத்தை ஆள்கிறது. இனம், நிறம், குணம் என எல்லாவிதமான பாகுபாடுகளையும் சரிசெய்யும் சக்தியாக காதல் மட்டுமே இருக்கிறது. லைலா-மஜ்னூன், கேதரீன் ஹெப்பர்ன்-ஸ்பென்ஸர் ட்ரேஸி, கிளார்க் கேபிள்-கரோல் லோம்பார்ட் போன்றோரின் காதல் நிகழ்வுகளை நம் கண்ணெதிரே நடப்பது போன்ற ஓட்டத்தோடும், காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளோடும் அழகியலாக விளக்கி உள்ளார் நூலாசிரியர் மதன். காதலில் கரைய விரும்புகிறவர்கள், தன் காதலை எப்படி வெளிப்படுத்துவது, தன் ஜோடியிடம் எவ்வாறு நடந்துகொள்வது, தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன, அதைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ன என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன. மேலும், இந்த நூலில் இடம்பெற்றுள்ள, ‘காதலை வெளிப்படுத்துவதற்கான சுயபரிசோதனை வழிமுறைகள்’, காதலர்களுக்கான வழிகாட்டியாக விளங்கும். மதன் படைத்த இந்தக் காதல் குளத்தில் நீங்கள் மகிழ்வோடு கண் எறிந்து பார்க்கலாம். நிச்சயம் உங்கள் நெஞ்சத்தை வசீகரிக்கும்.
உயிர்மொழி
Author: Dr.N.Shalini
Publisher: Vikatan Publications
Product Code: MAVI351
To Buy - http://www.myangadi.com/uyirmozhi-vikatan-publications
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற குணங்களும் வழிவழியாக அமைந்துவிடும். ஆனால், அனைத்து உறவுகளின் மீதும் ஒருவருக்குப் பாசம் வந்துவிடாது. அதிலும் ஆண்-பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் வாய்ந்தது! கணவன்-மனைவி என்ற உறவுச்சங்கிலி இடையில் ஏற்படுவது. திருமணம் என்ற பாலம் மட்டுமே இவர்களை இணைப்பதால், அந்தஸ்து, வேலை, பொருளாதாரம், உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம் போன்ற காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது அந்த உறவுப்பாலம் உடையவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

‘ஆண்தான் உயர்ந்தவன்... பெண்தான் உயர்ந்தவள்’ என்கிற ஈகோ உருவாகி, இருவருக்கும் இடையில் அன்பு நழுவும் நேரத்தில் பிரிவு என்பது நிரந்தரமாகிவிடுகிறது! இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது? இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம்? ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா? -மனித இனம் தழைக்க, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆண்-பெண் உறவு மேம்படவும், திருமண பந்தம் நீடிக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண, பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஆண்&பெண் உறவுச் சிக்கலை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இந்த நூலில் எழுதியிருக்கிறார், உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி. அடிமைத் தளத்திலிருந்து விடுபடவும், தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ளவும், கலவி வாழ்க்கையில் வீரியம்மிக்க நல்ல வாரிசுகளைக் கருவாக்கவும் ஆதிகாலத்திலிருந்தே பெண் இனம் எப்படி பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.
உயிர்
Author: Dr.Narayana Reddy
Publisher: Vikatan Publications
Product Code: MAVI354
To Buy - http://www.myangadi.com/uyir-vikatan-publications
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.
அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர்.
உடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை விருத்திக்கான வழியும்கூட..! எனவேதான் செக்ஸை மனித இனம் உயர்நிலையில்வைத்து மதிப்பிடுகிறது.
பருவ மாற்றத்தினால் உடலில் உருவாகும் கிளர்ச்சியைக் கண்டு, குழப்பத்தில் மன உளைச்சல் அடைபவர்கள் பலர். உடலைப் பற்றி பேசினால்கூட, 'என்ன அசிங்கமா, செக்ஸா பேசுற' என தவறான எண்ணம் கொண்டவர்களும் பலர். வெளியே சொல்லி விவாதிக்க தயங்கும் விதமாக செக்ஸ் பலருக்கு புதிராகவே உள்ளது. உடலின் இயக்கத்துக்கு அடிப்படை விஷயங்களான பசி, தாகம் போன்றுதான் செக்ஸும் என்பதை ஏற்க மறுக்கிறது அவர்களது மனம்.
ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்
Author: Krishna Davinci
Publisher: Vikatan Publications
Product Code: MAVI350
To Buy - http://www.myangadi.com/aadhalinaal-romance-seiveer-vikatan-publications
காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போகிறது? ஊடலும் கூடலும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஆனால், ‘இன்பமும் துன்பமும் இணைந்த கலவைதான் வாழ்க்கை’ என்கிற புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது?

பல வருடப் பாசமும் காதலும் நொடியில் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில் உடைந்துபோகும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சரியான புரிதலும், சரிவிகித அன்பும் இருக்கும் இடத்தில் நிச்சயம் காதலும் நிலைத்திருக்கும். அதற்கான வழிகாட்டுதலை மிக மென்மையான நடையில் இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பிரபலமானவர்களின் மேற்கோள்களுடனும், தான் சந்தித்தவர்களின் அனுபவங்களுடனும் கிருஷ்ணா டாவின்ஸி ரொமான்ஸ் ரகசியங்களை எழுதி இருக்கும் விதம் அலாதியானது. ஓவியர் மணியம் செல்வனின் அழகிய ஓவியங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படைப்பு இப்போது நூல் வடிவில்! இதில், பக்கத்துக்குப் பக்கம் நிரம்பி இருக்கும் ரொமான்ஸ் நுணுக்கங்கள் நெஞ்சுக்குள் மாமழையாகப் பொழிந்து உங்களை வசப்படுத்தும் என்பது நிச்சயம்!