Showing posts with label Laws & Politics. Show all posts
Showing posts with label Laws & Politics. Show all posts

Monday, June 16, 2014

நீங்களும் நுகர்வோரே

நீங்களும் நுகர்வோரே

 Author: Advocate T.Ramalingam 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI401

To Buy - http://www.myangadi.com/neengalum-nugarvorae-vikatan-publications 
 சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று, விடுதலை வேள்வியின்போது நமது தலைவர்கள் முழங்கினர். நாமிருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்; இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - என்று மகாகவி பாரதி எழுதினான்.

நம்முடைய உரிமைகள் என்ன என்றுகூடத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் வாழும் மக்கள் நம் நாட்டில் அதிகம். உரிமைகளைப் போராடிப் பெறுவது; கடமைகளைக் குறைவின்றிச் செய்வது; இவை இரண்டும் இணைந்த சமுதாயமே வெற்றிபெற்ற சமுதாயமாகும்.

இந்த உலகில் நம் அனைவரின் அடிப்படைத் தேவையாக விளங்குபவை உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இவற்றைப் பெறுவதற்கு ஏதோ ஒரு தருணத்தில், நாம் அந்தப் பொருள்களின் பயனை அனுபவிக்கக்கூடிய பயனாளிகளாக, அதாவது நுகர்வோராக மாறுகிறோம்.

முதலில், நுகர்வோர் என்பவர் யார், முறையீட்டாளர் என்பவர் எப்போது அதற்குரிய தகுதியைப் பெறுகிறார், பொருள் நுகர்வின்போது ஏற்படும் நூதன முறைகேடுகள் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன, நுகர்வின்போது நாம் எப்படி விழிப்போடு இருந்து தவறைக் கண்டுபிடிப்பது போன்ற பலவித கேள்விகளுக்கான‌ பதில்கள் நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது. 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



 

Wednesday, June 11, 2014

தைரியமாக சொத்து வாங்குங்கள்

தைரியமாக சொத்து வாங்குங்கள்

 Author: Advocate T.Ramalingam 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI400

To Buy - http://www.myangadi.com/thairiyamaga-sothu-vaangungal-vikatan-publications 
 ‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது.

வாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். ஆம், ஒரு வீடு வாங்கும்போது அடைகிற மகிழ்ச்சியே அளவற்றது. அப்படியே நம் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு, வீட்டைக் கட்டும்போது எந்தவித வில்லங்கமும் இல்லாத நிலத்தில்தான் நாம் கட்டுகிறோமா என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வாங்குகிற வீடாக இருந்தால், நமக்குத் தேவையான வசதிகளோடு அந்த வீடு அமைந்திருக்கிறதா என்பதையும் சட்டப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதையும் பார்த்துத்தான் அந்த வீட்டை வாங்கவேண்டும்.

வீடு வாங்குவதிலும் கட்டுவதிலும் அனுபவம் எல்லோருக்கும் இருக்காது. அதனால், விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் நிலம் வாங்க சிலர் நினைப்பார்கள். அப்படி வாங்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..? அதில் இருக்கக்கூடிய சட்டச் சிக்கல்களை எப்படிக் களைவது..?



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



Sunday, June 8, 2014

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

 Author: S.A.M.Parakkath Ali 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI527

To Buy - http://www.myangadi.com/thagaval-ariyum-urimaich-chattam
 
குடும்ப அட்டை முதல் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்குகூட ஓய்வின்றி அலைய வேண்டி உள்ளது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து சாமானிய மக்கள் மீள்வதற்கான மருந்துதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு வரமாக கிடைத்துள்ள வாய்ப்பு இது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும், அரசு நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்குமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருமே தகவல் பெறும் உரிமை உடையவராவர் என்பதை ஆணித்தரமாக புரிய வைக்கிறது இந்த நூல். பொதுமக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து எளிமையாகவும் உண்மை சம்பவங்களின் உதாரணங்களோடும் இந்த நூலின் ஆசிரியர் பரக்கத் அலி எழுதியிருக்கிறார். இந்தச் சட்டத்தின் வலிமை, குறைகள், நிறைகள், மேல்முறையீடு, மனு போடுவதற்கான கட்டண விபரம் மற்றும் செலுத்தும் விதம், எந்தெந்த துறைகளுக்கு பொருந்தும், பொருந்தாது, எவ்வளவு நாட்களில் பதில் கிடைத்துவிடும் என்பது போன்ற நிறைய பயன் உள்ள தகவல்களைக்கொண்ட இந்த நூல் கடைக்கோடி பாமரனுக்கும் நிச்சயம் கைகொடுக்கும்!


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com