Showing posts with label Essays. Show all posts
Showing posts with label Essays. Show all posts

Friday, June 13, 2014

நில்... கவனி... அபாயம்!

நில்... கவனி... அபாயம்!

 Author: Katturaiyalargal 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI389

To Buy - http://www.myangadi.com/nil-kavani-abaayam-vikatan-publications 

சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.

தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.

ஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் 'ஜூனியர் விகடன்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.

'ஸ்பெஷல் ஸ்டோரி' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



Thursday, June 12, 2014

நடக்கட்டும் நாக்கு வியாபாரம்!

நடக்கட்டும் நாக்கு வியாபாரம்!

 Author: Pa.Thirumavelan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI550

To Buy - http://www.myangadi.com/nadakkattum-naakku-viyabaaram-vikatan-publications 
 தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்களையும் சகித்துக்கொள்ளும் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அதைப்பற்றிப் பேசி, பின் அதை மறந்துவிடுவார்கள். அரசியல்வாதிகளும் தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே புதுப்பித்துக்கொள்வார்கள். ஆனால், ஊடகங்கள் மட்டுமே அமைச்சர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை; ஆன்மிகவாதிகள் முதல் ஆண்டிகள் வரை நிகழ்த்தும் தில்லாலங்கடி வேலைகளை அவ்வப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். அந்த வகையில் விகடனில் வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மக்களின் மனக் குமுறல்களாகவே அமைந்திருக்கும். சாட்டையை எடுத்து விளாசினாலும் தார்க்குச்சி கொண்டு குத்தினாலும் அரசியல்வாதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’த்தான் இருக்கும். ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன் எழுத்தால், சொல் வன்மையால் அவர்கள் மேல் போர்த்தியிருக்கும் பல்வேறு ‘கலர்’ சட்டைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார் நூல் ஆசிரியர் திரு. ப.திருமாவேலன். கடந்த ஐந்து வருடங்களில் விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் கதம்பத் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் தேதி குறிப்பிட்டு இருப்பது, வாசகர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை. 

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com

Tuesday, June 10, 2014

தீதும் நன்றும்

தீதும் நன்றும்

 Author: Naanjil Nadan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI386

To Buy - http://www.myangadi.com/theedhum-nandrum-vikatan-publications 
 தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரையைப் பதிக்கத் தவறாதவர். ‘தீதும் நன்றும்!’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில், ஒவ்வொரு வாரமும் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும், அரசியல்_சமூக அந்தஸ்து பெற்று, வாசகர்களிடையே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்திய கட்டுரைகள்! அவற்றின் தொகுப்பே இந்த நூல். பெண்கள் பயிலும் பள்ளிகளில் சுகாதாரக்கேடு நிறைந்திருப்பதை, மிகுந்த அக்கறையோடு இவர் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரை, கல்வித்துறை அதிகாரிகளை உற்றுநோக்க வைத்தது. கலாசாரச் சின்னங்களைப் பாதுகாக்க, கோபுரங்கள் மற்றும் சிலைகளின் பெருமைகளைச் சொன்ன விதமும், வர்ணித்த அழகும் இன்பமூட்டும் கவிதை! ஊர்வலம் பற்றி இவர் எழுதிய கட்டுரையில், கோபமும் சாடலும் தீப்பற்றி எரிவதை உணரலாம்!


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



திருப்பி அடிப்பேன்

திருப்பி அடிப்பேன்

 Author: Seemaan.Raa.Saravanan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI383

To Buy - http://www.myangadi.com/thiruppi-adippen-vikatan-publications 
 தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவுத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவர் சீமான். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அரசுக்கு எதிராக ஆவேச வாதங்களை எழுப்பியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சீமான். ஐந்து மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சிறை மீண்டுவந்த சீமான், ஜூனியர் விகடனில் ‘திருப்பி அடிப்பேன்!’ என்ற தலைப்பில் எழுதிய தொடர்தான் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலில், ஈழப் பிரச்னை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தி இருக்கும்விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழும்பிய தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி! ஈழத் துயரங்களையும், தாய்த் தமிழகத்தில் நிகழும் சகிக்க முடியாத அரசியல் போக்கையும், கனல் தெரிக்கும் வார்த்தைகளால் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இளைஞர்களை முறுக்கேற வைத்தன. ஒவ்வொரு கட்டுரையிலும் உக்கிரமாக வெடித்த சீமானின் வார்த்தைகள், அரசியல் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்துக்கான பெரும் போராக ஒவ்வொரு தமிழனையும் உசுப்பேற்றின! சீமானின் ஆவேச வீச்சை, உக்கிரம் குறையாதபடி பதிவு செய்திருக்கிறார் இரா.சரவணன். ஜூனியர் விகடனில், பற்றி எரியும் பரபரப்புத் தொடராக வெளிவந்த சீமானின் கட்டுரைகள், நிச்சயம் உங்களையும் அதே ஆவேசத்தோடு ஆட்கொள்ளும்!


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



Sunday, June 8, 2014

தமிழருவி

தமிழருவி

 Author: Thamizharuvi Maniyan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI381

To buy - http://www.myangadi.com/thamizharuvi-vikatan-publications 
 தமிழ் வாசகர்களுக்கு தமிழருவி மணியன் புதியவரல்ல. இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு சமூக விஞ்ஞானியும்கூட! சிறந்த சிந்தனையாளரான தமிழருவி மணியன், அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் பற்றியும், நேர்மையற்ற அரசியல்வாதிகள் பற்றியும் எழுதி, தமிழக மக்களை ‘மாற்றம் வேண்டும்!’ என வீறுகொண்டு எழச் செய்தவர். ஊழல்கள் புரையோடிப் போயிருக்கும் அரசியலுக்குத்தானே அறுவை சிகிச்சை தேவை! ‘ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால் பாதிக்கப்படுவது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே. ஆனால், அரசியலில் நுழைந்து, பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுபவது நாடும், நாட்டு மக்களும்தான்!’ என, அரசியலில் உள்ள அழுக்கை நீக்க, கட்டுரைகளில் இவர் வைக்கும் வாதங்கள் ஆணித்தரமானவை. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், இதழ்களில் இவர் எழுதிய விழிப்பு உணர்வுக் கட்டுரைகள், கடிதங்கள், பேட்டிகள், ‘விகடன் மேடை’ பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் ஆகியவற்றுடன், ‘அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை’ என்ற கட்டுரைத் தொடரும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இப்போது உங்கள் கைகளில் மிளிர்கிறது. எப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்தாலும், அவர்கள் செய்யும் தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்டு இவர் எழுதிய கட்டுரைகளும், மக்களின் மனதை மேம்படுத்தும் கலாசாரம், பண்பாடு பற்றிய கட்டுரைகளும் விகடன் வாசகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றன. ‘குற்றால அருவி’யில் குளிப்பது மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, மூலிகைகளை அள்ளிக்கொண்டு வரும் அருவி நீர், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. அதைப் போல இந்த ‘தமிழருவி’ வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமல்ல, அதனைச் செயல்படுத்தி பலனையும் பெற உதவுகிறது


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com