நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!
Author: Comcare K.Bhuvaneshwari
Publisher: Vikatan Publications
Product Code: MAVI545
To Buy - http://www.myangadi.com/neengal-kankanikkapadukireerkal-vikatan-publications

‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொழி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னல் வருமுன் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவற்றில் பிரச்னை ஏற்பட்ட உடன் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள யாரை, எவ்வாறு அணுக வேண்டும் என்று விலாவாரியாக வகுப்பு எடுத்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் வசதி இணையதளத்தின் மூலம் நடக்கும்போது ஒரு சில ஆபத்துகளும் நம்மைத் தேடி வரத்தான் செய்கிறது. அந்த ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக எழுதியுள்ளார் நூல் ஆசிரியர். சைபர் வேர்ல்டில் நாம் பயணிக்கும்போது ‘மூன்றாவது கண்’ நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கும். நமது பாதுகாப்புக்காக நம்மைச் சுற்றி ஒரு கவசத்தை அணிந்துதான் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாதுகாப்புக் கவசமாக இந்தப் புத்தகம் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் அக்கறையோடு இந்தச் சமுதாயத்தையும் பேணிப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்கு இந்த நூல் அவசியம் உதவும்.
கையளவு களஞ்சியம்
Author: Dr.Sankar Saravanan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI185
To Buy - http://www.myangadi.com/kaiyalavu-kalanjiyam-vikatan-publications
சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து கையளவு களஞ்சியம் என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது.
இந்திய வரலாற்றில் சிந்துச் சமவெளி நாகரிகம் தொடங்கி மக்களை ஆட்சி செய்த பேரரசுகள், இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு, பழந்தமிழக வரலாற்றுச் சான்றுகள், தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்கள், உலக வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஆப்ரகாம் லிங்கன் வரை இந்நூல் உலக வரலாற்றை ஒரு வரிச் செய்திகளாக விவரிக்கிறது.
கணிதம்
Author: C.Kala Chinnadhurai
Publisher: Vikatan Publications
Product Code: MAVI502
To Buy - http://www.myangadi.com/kanitham-vikatan-publications
அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசுப் பணி நிச்சயம் சாத்தியம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, விழுந்து விழுந்து படித்தால் மட்டும் போதாது. தேர்வு நுட்பம் அறிந்து, எத்தகைய கேள்விகளுக்கு ஒவ்வொரு தேர்வுகளின் போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில் நடந்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பாடத் திட்டங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பிலிருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன்படி கணிதப் பாடத்தின் அனைத்துவிதமான கேள்வி பதில்களும் இந்த நூலில் சீராகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கும் கேள்விகளைச் சரியாக அனுமானித்து, அவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர்.
கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்கும் நூதனம் அறிந்து, அதன் அடிப்படையிலான கேள்வி & பதில்களையும் தொகுத்திருப்பது தனிச்சிறப்பு. பாடத் திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினரின் கணித அறிவைத் திறம்பட மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு ஆகச்சிறந்த உறுதுணையாக விளங்கும். மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி வினாக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC - CSE, TET,VAO உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!