Showing posts with label Family& Parenting. Show all posts
Showing posts with label Family& Parenting. Show all posts

Monday, May 12, 2014

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

 Author: Dr.V.Jeyanthini 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI437

To Buy - http://www.myangadi.com/ungal-kuzhandhaiyum-ini-no-1-vikatan-publications

குழந்தைகள், இந்த உலகத்தின் ஈரத்தை இன்னமும் காப்பாற்றி வைத்திருப்பவர்கள். வறுமை தொடங்கி வன்முறை வரையிலான எந்த விஷயத்தையும் குழந்தைகள் சட்டைசெய்வது இல்லை. இந்த உலகம் இன்ப நீச்சலுக்கான தண்ணீர்த் தொட்டி என்பதுதான் குழந்தைகளின் பார்வை. ஆனால், நாம் குழந்தைகளைக் கையாளும் விதங்கள் எப்படி இருக்கின்றன? நாம் நினைக்கும்போது அந்தக் குழந்தை சிரிக்க வேண்டும்; நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். நாம் வலியுறுத்துவதை ஏற்க வேண்டும். 
 எதிர்பார்ப்பு என்கிற பெயரில் இப்படி எத்தனைவிதமான நெருக்கடிகள்? சாப்பாடு தொடங்கி படிப்பு வரையிலான அத்தனை விஷயங்களையும் நம் விருப்பப்படியே குழந்தைகள் மீது திணிக்கிறோம். உலகத்தின் புது வரவுகளுக்கு நாம் வழிகாட்டும் பக்குவமா இது? குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்கிற நுண்கலையை இந்த நூலின்வழியே கற்றுத் தருகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. பெற்றோர்கள் குழந்தையிடம் எதிர்பார்ப்பதைப்போலவே குழந்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதனைப் புரிந்து நடப்பதே அந்தக் குழந்தையை நம்பர் 1 ஆக்குவதற்கானத் தகுதி என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார் டாக்டர் வி.ஜெயந்தினி. ‘அவள் விகடனில்’ தொடராக வந்த கருத்துக்கள் இப்போது புத்தக வடிவில்! உங்கள் குழந்தையை நம்பர் 1 ஆக்க, இந்த நூல் நிச்சயம் உதவிகரமாக விளங்கும்.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



Wednesday, April 30, 2014

குழந்தைகள் சைக்காலஜி

குழந்தைகள் சைக்காலஜி

 Author: G.S.S. 
 Publisher: Nalam Publications 
 Product Code: MANM050

To Buy - http://www.myangadi.com/kuzhandhaigal-psychology-nalam-publications

குழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி?

திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா?

அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன?

பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி?

என்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான மனத்தைப் புரிந்து கொள்ள உதவும் வேறு பல மனரீதியான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். எளிமையான நடையில், ஆலோசனைகளும், தகவல்களும் அடங்கிய இந்தப் புத்தகம், ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய ஒன்று.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்

குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்

 Author: Dr.S.Muthu Chella Kumar 
 Publisher: Nalam Publications 
 Product Code: MANM062

To Buy - http://www.myangadi.com/kuzhandhagalukkana-unavugalum-kodukkum-muraigalum-nalam-publications

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?
என, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட. 


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com