துணையெழுத்து
Author: S.Ramakrishnan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI367
To Buy - http://www.myangadi.com/thunaiyezhuthu-vikatan-publications
தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.
ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான முடிச்சுகளைக் கொண்டிருக்கிறது... மனிதர்கள் எத்தனை விதமான மனோபாவம் கொண்டவர்கள்... ஒரு கணம் மகிழ்ச்சியாகவும், மறுகணம் துயரமாகவும் மாறும் மனம்தான் எவ்வளவு ஆச்சரியமானது...
சிறிது வெளிச்சம்!
Author: S.Ramakrishnan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI359
To Buy - http://www.myangadi.com/siridhu-velicham-vikatan-publications

குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து இந்த நூலில் ஓர் அருமையான உறவுப் பாலம் அமைத்துள்ளார் நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். ஆனந்த விகடன் இதழில் ‘சிறிது வெளிச்சம்!’ என்ற தலைப்பில் வெளிவந்து, வாசகர்களின் இதயக் கதவைத் திறந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்! வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. அன்றாட வேலைப்பளுவினால், தங்களைச் சூழ்ந்துள்ள மனிதர்களை விட்டு விலகி திசை தெரியாமல் ஓடுகிறார்கள். ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறுகிறார்கள்.
கேள்விக்குறி
Author: S.Ramakrishnan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI370
To Buy - http://www.myangadi.com/kelvikkuri-vikatan-publications
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.
கம்பனில் ராமன் எத்தனை ராமன்
Author: Vikatan Prasuram
Publisher: Vikatan Publications
Product Code: MAVI362
To Buy - http://www.myangadi.com/kambanil-raman-ethanai-raman-vikatan-publications

சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார்.
ஊருக்கு நல்லது சொல்வேன்
Author: Thamizharuvi Maniyan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI365
To Buy - http://www.myangadi.com/oorukku-nalladhu-solven-vikatan-publications
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன.
தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது.
நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள்...