Showing posts with label Translation. Show all posts
Showing posts with label Translation. Show all posts

Wednesday, June 18, 2014

பூமியை பாதுகாப்போம்

பூமியை பாதுகாப்போம்

 Author: Nadaliya Marshal (K.N.Srinivas)  
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI123

To Buy - http://www.myangadi.com/boomiyai-paadhukaapom-vikatan-publications


‘இன்றைய வாழ்க்கை முறையில், பசுமைச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியுமா?’ - இந்தக் கேள்வியோடுதான் துவங்க வேண்டியுள்ளது நம் அன்றாட வாழ்க்கையை! ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், பூமிக்கோளை நசுக்கிக் கொண்டிருக்கிறதா அல்லது ஊட்டமேற்றிக் கொண்டிருக்கிறதா..? என்று எடை போடத் துணியும்போதுதான், மேற்காணும் கேள்வி நமக்குள் எழுகிறது. பெரும்பாலும், மனிதர்கள் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக ஏற்படுத்திக் கொண்ட வசதிகளால் விளைந்த கசடுகள்தான் பூமியின் பரப்பையும், வான மண்டலத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. குளிர் சாதனம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், தரை விரிப்புகள், மரச்சாமான்கள், கண்ணாடிகள், பிளாஸ்டிக், சாயக் கழிவுகள், காற்றை நறுமணமாக்கும் ஸ்ப்ரேக்கள், பூச்சி மருந்துகள் வெளியிடும் ஆக்ஸைடு, தொழிற்சாலை வாயுக்கள் போன்றவையே ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கும் முக்கிய காரணிகள். ‘குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதலுக்கு உலகமே இன்று அடிமையாகி விட்டது!

தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்குவதாலும், கரியமில வாயுவை வெளியிடக்கூடிய வாகனங்களில் பயணிப்பதாலும், மரங்களை வெட்டி, வீடுகள் கட்டும் பரப்பளவை அதிகரிப்பதாலும் இயற்கை வளங்களை நாம் அன்றாடம் சுரண்டி வருகிறோம். இவற்றைத் தவிர்த்து, பசுமைச் சூழல் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான 52 ஐடியாக்களை வாசகர்களின் மனதில் பதிய வைப்பதே இந்த நூலின் நோக்கம்.

‘Save the Planet’ என்ற தலைப்பில், நடாலியா மார்ஷல் எழுதிய ஆங்கில நூலை, எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கே.என்.ஸ்ரீனிவாஸ். ஒவ்வொரு அத்தியாத்திலும் உள்ள ‘யோசனை மூலை’, ‘அப்படியா!’, ‘சந்தேகப் பெட்டி’ போன்ற அம்சங்கள், பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தை அளிக்கும் _ சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சிறந்த பலனைத் தரும்.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



புகைப்பதை நிறுத்துவோம்

புகைப்பதை நிறுத்துவோம்

 Author: Peter Cross & Clive Haywood 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI142

To Buy - http://www.myangadi.com/pugaippadhai-niruthuvom-vikatan-publications 
 ‘தீபாவளிக்குப் பிறகு நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்..!’ ‘ஜனவரி முதல் தேதி முதல் சிகரெட்டுக்கு குட்பை!’ ‘என் பிறந்த நாளோடு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்காது..!’ _ உயிரைக் குடிக்கும் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுபட இப்படி நாள் குறிப்பது வழக்கம். ஒரு சிலர் வைராக்கியத்துடன் தடாலடி அறிவிப்பு செய்து விட்டு, அது முடியாமல் மீண்டும் அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவதும் உண்டு!

புகைப்பழக்கம் எத்தனை ஆபத்தானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் ஏற்படும் செலவுகளும் புரியும். இருப்பினும் அந்த விஷ அரக்கனின் கோரப் பிடியிலிருந்து விடுபட வழி தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு வழித்துணையாக இருந்து உதவும் இந்தப் பயனுள்ள நூல்! புகைப்பழக்கத்திலிருந்து மொத்தமாக விடுபடுவதற்கு சூப்பரான 52 ஐடியாக்களை வழங்கியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள். புகைப்பவர்களை அச்சப்படுத்தாமல் _ அதேசமயம் அதன் ஆபத்துகளை அடுத்தடுத்து பட்டியலிட்டுக் காட்டுகிறார்கள். 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



Tuesday, June 17, 2014

பல்வேறு உலகில் என் பயணம்

பல்வேறு உலகில் என் பயணம்

 Author: Justice V.R.Krishna Iyer 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI139

To Buy - http://www.myangadi.com/palveru-ulagil-en-payanam-vikatan-publications 

‘சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக, தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர். தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்ணனைகளோடு பள்ளி, கல்லூரிகளில் படித்த காலங்களில் தனக்கு கல்வி பயிற்றுவித்தவர்களையும், அவர்கள் கல்வி போதித்த விதத்தையும்கூட வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பசுமை பொங்க நினைவு கூர்ந்துள்ளார்.

தன்னுடன் பிறந்தவர்களின் இழப்பும், அன்பால் பிணைக்கப்பட்ட மனைவியின் இழப்பும் எந்த அளவுக்கு தன் மனதைப் பாதித்தது என்பதை விவரித்த விதம் கண்ணில் நீர் கசிய வைக்கும் எழுத்து. இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான அனுபவங்களையும், தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் ஏற்பட்ட அனுபவங்களையும் மிகவும் நேர்மையாக விவரித்திருக்கிறார். ஒரு சிறந்த நீதிபதியாக மட்டுமல்ல எழுத்தாளராகவும், இடதுசாரி சிந்தனைகளோடுகூடிய ஆன்மிக ஆர்வம் கொண்டவராகவும், மக்களின் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றம் வரவேண்டும் என்ற பொதுநல சிந்தனையாளராகவும் அவர் பரிமளித்ததை நாமும் தெரிந்து கொள்வோம்.. 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



பரீட்சையில் பாஸ்... பாஸ்!

பரீட்சையில் பாஸ்... பாஸ்!

 Author: Andro Homes (Na.Vinothkumar) 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI124

To Buy - http://www.myangadi.com/pareetchayil-pass-pass-vikatan-publications 
 “டேய், இன்னைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரி, நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா. அதுல இருந்த அத்தனைக் கேள்விகளும் எனக்கு அத்துபடிடா!” “அப்படியா! அப்போ இந்தப் பரீட்சையில் நீ நூத்துக்கு நூறுன்னு சொல்லு.” “எனக்கு அந்தக் கேள்விகள்தான் அத்துப்படின்னு சொன்னேனே தவிர, பதில் தெரியும்ன்னு சொல்லலே..!” _ இப்படித்தான் இருக்கிறது, இன்றைய மாணவர்களின் கல்வி நிலை! ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ என்ற வரியை உச்சரித்து அதன் முழு சந்தோஷத்தைப் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவும் வகையில், ஆண்ட்ரூ ஹோம்ஸ், ஆழ்ந்தக் கருத்துகளோடு ஆங்கிலத்தில் எழுதிய ‘Pass your Exams’ என்ற நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். இதனை, ஒரு மாணவனுக்கே உரிய கவனத்துடன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ந.வினோத்குமார். பாடங்களை கவனிப்பது மட்டுமே தேர்வு எழுத போதுமானதா, பாடங்களை எவ்வாறு திட்டமிட்டுப் படிக்க வேண்டும், பரீட்சையின்போது நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன, தேர்வு அறையில் நாம் எந்தவிதமான மனநிலையில் இருக்க வேண்டும், தேர்வுத்தாளைத் திருத்தும் மதிப்பீட்டாளர்கள் மாணவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்... போன்ற கேள்விகளுக்கான பதில்களை 52 ஐடியாக்களாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆண்ட்ரூ ஹோம்ஸ். ஒவ்வொரு அத்தியாத்திலும் உள்ள ‘யோசனை மூலை’, ‘அப்படியா!’ போன்ற அம்சங்கள், நீங்கள் பாடங்களில் அதிக கவனம் செலுத்த உறுதுணையாக இருக்கும். அதிலும் சந்தேகப் பெட்டியில், உள்ள கேள்வி_பதில் பகுதி, ஒவ்வொரு மாணவரும் தன்னைத்தானே சோதித்துப் பார்க்க சிறந்த வாய்ப்பு. பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ்மார்க் பெற்றிட, இந்த நூல் சிறந்த நண்பனாக விளங்கும்!


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



Thursday, June 12, 2014

நிச்சய வெற்றி

நிச்சய வெற்றி

 Author: Prakash Iyar (Na.Vinothkumar, Tam) 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI110

To Buy - http://www.myangadi.com/nichaya-vetri-vikatan-publications 
 வெற்றி பெறுவது எப்படி, எப்போதும் வெற்றி என்பதை வழக்கப் படுத்திக்கொள்வது எப்படி, போராட்டமான பணியிலும் அதை நிச்சய வெற்றியாக்குவது எப்படி என்று லட்சிய வாழ்க்கை வாழ விரும்பும் இளைஞர்களுக்கு அருமையான வழிகாட்டி இந்த நூல். சூடான நீருக்கும், ரயிலை நகர்த்தும் நீராவிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப்போல உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளும் அப்படி ஒரு சின்ன இடைவெளியில்தான் இருக்கும். ஒரு நொடிக்கும் குறைவான நொடிதான், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரையும், தோல்வி அடைந்தவரையும் வித்தியாசப்படுத்துகிறது.

பசையைக் கண்டுபிடித்த டாக்டர் ஸ்பெனிஸ் சில்வர், கணக்கில் ‘வீக்’கான சச்சின் டெண்டுல்கர், பத்தாவது பாஸ் பண்ண முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்த திருபாய் அம்பானி என, இப்போது உச்சத்தில் இருக்கும் பலரும் தங்கள் குறைகளைக் கடந்து சாதனை புரிந்தவர்கள்தான்.வளர்ந்துவரும் இளைஞர்கள், தலைவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் தங்களை உருமாற்றிக்கொள்ளத் தேவையான அனைத்துத் தகவல்களையும், தன் அனுபவங்களோடு எளிமையாக விளக்குகிறார் நூலாசிரியர் பிரகாஷ் ஐயர்.

Penguin பதிப்பகம் வெளியிட்ட ‘The Habit of Winning’ என்ற ஆங்கில நூலை, அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ந.வினோத்குமார். கருவேலங்காட்டுக்குள் வாழும் வண்ணத்துப்பூச்சியைப் போல்தான் நம்முடைய வாழ்க்கையும் சவால்களால் நிரம்பி இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் சக்தியாகவும், சாதனைக்கான யுக்தியாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும்!



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com