Friday, May 30, 2014

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல்

 Author: Tho.Paramasivan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI375

To Buy - http://www.myangadi.com/samayangalil-arasiyal-vikatan-publications

தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார்.

 உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை... கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது... கடலாகத் தெரியும்!


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



சந்தனக்காட்டு சிறுத்தை

சந்தனக்காட்டு சிறுத்தை

 Author: Balakrishnan 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI313

To Buy - http://www.myangadi.com/santhana-kattu-siruthai-vikatan-publications 
 வீரப்பனின் வாழ்க்கை தமிழக வரலாற்றின் ரத்த அத்தியாயம். இருபது வருடங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி அத்தனையிலும் பரபரப்பாக பவனிவந்தவன். தமிழகம், கர்நாடகம் என இரு மாநில போலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அந்தக் காட்டுச் சிறுத்தையின் கதைதான் என்ன? சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல்... என தன் ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்தே நாட்டை அதிரவைத்த அவன் பின்னணி என்ன? சின்னஞ்சிறு ஆள்படை வைத்துக்கொண்டு வனஅதிகாரியிலிருந்து வி.ஐ.பி_க்கள் வரை கச்சிதமாகக் கடத்தி இரண்டு அரசுகளையே மிரட்ட முடிந்தது எப்படி? வீரப்பன் என்ற மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகம் எப்படி நுழைந்தது? இரக்கமில்லாத அந்த மிருகத்துக்குள்ளும் மனைவி, குழந்தை என குடும்பப்பாசம் வந்தது எப்படி? இப்படி ஏகப்பட்ட கேள்விக் குறிகளுக்கு விடைதேடும் முயற்சியாகத்தான் 'சந்தனக்காட்டு சிறுத்தை!' ஜூனியர் விகடனில் ஆரம்பிக்கப்பட்டது. வீரப்பனின் அட்டகாசங்கள் உச்சத்தில் இருந்த சமயம் இந்தத்தொடர் ஜூ.வி.யில் வந்துகொண்டிருந்தது. நாளாக நாளாக, அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமானதும் வீரப்பனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. 


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com





Thursday, May 29, 2014

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர்

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர்

 Author: S.Ganesa Sarma 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI226

To Buy - http://www.myangadi.com/sangeetha-sankarar-kanchi-maha-periyavar-vikatan-publications 
 நடமாடும் தெய்வத் திருஉருவாக நம்மிடம் வாழ்ந்த காஞ்சி மகா பெரியவர் ஓர் ஆன்மிகப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து அருள் பாலித்தவர். பக்தர்களுக்கு நன்னெறி போதித்து அவர்களை நல்வழியில் அழைத்துச் சென்ற வள்ளல் பெருமான். அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தவர் மகா பெரியவர். மெய்ஞானம் அவருக்குத் தெரியும். விஞ்ஞானம் அவர் விரல் நுனியில். அணு ஆயுதங்கள் பற்றி பேசுவார். மருத்துவம் பற்றி அலசுவார். சாஸ்திரங்களை கரைத்துக் குடித்திருந்த அவருக்கு சங்கீத லட்சணங்களும், லட்சியங்களும் பூரணமாக தெரிந்திருந்தது. மகா பெரியவரின் தரிசனத்துக்காக செல்லும் சங்கீத வித்வான்கள் பலரும் அவர் சந்நிதானத்தில் பாடுவதையும், இசைப்பதையும் பெரும் பேறாகக் கருதுவார்கள். தங்களுக்குத் தெரியாத இசை நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டு பரவசப்படுவார்கள். எஸ்.கணேச சர்மா எழுதியிருக்கும் இந்த நூல், மகா பெரியவரின் இசைப் புலமையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளுக்கு பல்வேறு சந்தர்பங்களில் மகா பெரியவர் அளித்த துல்லியமான விளக்கங்களை பதிவு செய்கிறது. 


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



சக்தி தரிசனம் - பாகம் 2

சக்தி தரிசனம் - பாகம் 2

 Author: Kashyaban 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI078

To Buy - http://www.myangadi.com/sakthi-dharisanam-pagam-2-vikatan-publications

கம்ப்யூட்டர் சாதனைகளும் காலத்தின் வேகமும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாலும், நம் புனித பாரதத்தில் ஆன்மீகமும் ஆல் போல் வேர்விட்டுச் செழித்தோங்கியே வளர்ந்து வருகிறது.

ராக்கெட் வேகத்தில் செல்லும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு, ஆன்மீகத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் குறைந்ததாகத் தெரியவில்லை! காற்று வாங்குவதற்காகக் கோயில்களுக்கு வருபவர்கள் குறைந்து போய், மனநிம்மதி தேடி வருபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களை விகடனில் ஒதுக்கலாம்' என்று முடிவெடுத்தபோதுதான், 'சக்தி தரிசனம்' பிறந்தது. அதற்கு வாராவாரம் ஆதரவும் வரவேற்பும் கூடியது.

அதுவே விக‌ட‌ன் பிர‌சுர‌ வெளியீடாக‌ அவ‌தார‌ம் எடுத்த‌போது, அத்த‌னை ஆல‌ய‌ங்க‌ளையும் ஒரே தொகுப்பில் அட‌க்குவ‌து என்ப‌து இய‌லாம‌ல் போன‌து. அத‌னால், விக‌ட‌னில் வெளியான‌ ச‌க்தி த‌ரிச‌ன‌க் க‌ட்டுரைக‌ள் இரு ப‌குதிக‌ளாக‌ப் பிரிக்க‌ப்ப‌ட்டு, முத‌ல் தொகுப்பு க‌ட‌ந்த‌ ஏப்ர‌லில் உங்க‌ள் கையில் த‌வ‌ழ்ந்த‌து. முத‌ல் தொகுப்பில் மூழ்கித் திளைத்த‌ வாச‌க‌ப் பெரும‌க்க‌ள், 'அடுத்த‌ தொகுப்பு எப்போது வெளியாகும்?' என்று ஆவ‌லுட‌ன் எங்க‌ளுக்குக் க‌டிதம் எழுதிய வாசகர்களுக்காக இதோ சக்தி தரிசனம் இரண்டாம் பாகம்.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



சக்தி தரிசனம் - பாகம் 1

சக்தி தரிசனம் - பாகம் 1

 Author: Kashyaban 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI077

To Buy - http://www.myangadi.com/sakthi-dharisanam-vikatan-publications 
 ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன்.

ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட்டுரைகள், ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

பிறகு வந்த நாட்களில், 'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களைத் தொடர்ந்து ஒதுக்குங்கள்... திருத்தலங்களின் அருமை பெருமைகளை விளக்கும் விரிவான கட்டுரைகள் விகடனில் வெளியானால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்கிற ரீதியில் வாசகர்களிடமிருந்து எண்ணற்ற கடிதங்களும் எங்களுக்கு வந்தன.

ஆன‌ந்த‌ விக‌ட‌னில் 'ச‌க்தி த‌ரிச‌ன‌ம்' என்ற‌ த‌லைப்புட‌ன், அம்ம‌ன் அர‌சாட்சி செய்யும் கோயில்க‌ளை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு எழுத‌லாம் என்று தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com