பெருந்தலைவர் காமராஜர்
Author: S.K.Murugan
Publisher: Vikatan Publications
Product Code: MAVI294
To Buy - http://www.myangadi.com/perunthalaivar-kamarajar-vikatan-publications

ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்னுதாரணமாக தானே பதவியிலிருந்து விலகினார்! அவரது செயலைக் கண்ட பிரதமர் நேரு தவித்து, காமராஜரை வழியனுப்ப முடியாமல் நெகிழ்ந்திருக்கிறார்! தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர்! இதுபோன்ற, மனதை ஈர்க்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் ‘பெருந்தலைவர்’ என்று அழைக்கப் பட்டார். கிராமம் தோறும் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தொழிலாளர் நலனுக்காக தொழிற்பேட்டைகள், விவசாயம் செழிக்க அணைத் திட்டங்கள் போன்ற அரிய செயல்களைச் செய்ததால் ‘கர்மவீரர்’ என்று போற்றப்பட்டார். காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ஆவணங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு, சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன். அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் இந்த நூலைப் படித்தால் காமராஜரைப் போல நேர்மையாளராக வாழ வேண்டும் என்ற வைராக்யம் ஏற்படும்.
பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்
Author: Swami Sugabodhanandha
Publisher: Vikatan Publications
Product Code: MAVI439
To Buy - http://www.myangadi.com/pennae-relax-please-vikatan-publications

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்! பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது!
பூமியை பாதுகாப்போம்
Author: Nadaliya Marshal (K.N.Srinivas)
Publisher: Vikatan Publications
Product Code: MAVI123
To Buy - http://www.myangadi.com/boomiyai-paadhukaapom-vikatan-publications
‘இன்றைய வாழ்க்கை முறையில், பசுமைச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியுமா?’ - இந்தக் கேள்வியோடுதான் துவங்க வேண்டியுள்ளது நம் அன்றாட வாழ்க்கையை! ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், பூமிக்கோளை நசுக்கிக் கொண்டிருக்கிறதா அல்லது ஊட்டமேற்றிக் கொண்டிருக்கிறதா..? என்று எடை போடத் துணியும்போதுதான், மேற்காணும் கேள்வி நமக்குள் எழுகிறது. பெரும்பாலும், மனிதர்கள் தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக ஏற்படுத்திக் கொண்ட வசதிகளால் விளைந்த கசடுகள்தான் பூமியின் பரப்பையும், வான மண்டலத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. குளிர் சாதனம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், தரை விரிப்புகள், மரச்சாமான்கள், கண்ணாடிகள், பிளாஸ்டிக், சாயக் கழிவுகள், காற்றை நறுமணமாக்கும் ஸ்ப்ரேக்கள், பூச்சி மருந்துகள் வெளியிடும் ஆக்ஸைடு, தொழிற்சாலை வாயுக்கள் போன்றவையே ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கும் முக்கிய காரணிகள். ‘குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதலுக்கு உலகமே இன்று அடிமையாகி விட்டது!
தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்குவதாலும், கரியமில வாயுவை வெளியிடக்கூடிய வாகனங்களில் பயணிப்பதாலும், மரங்களை வெட்டி, வீடுகள் கட்டும் பரப்பளவை அதிகரிப்பதாலும் இயற்கை வளங்களை நாம் அன்றாடம் சுரண்டி வருகிறோம். இவற்றைத் தவிர்த்து, பசுமைச் சூழல் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான 52 ஐடியாக்களை வாசகர்களின் மனதில் பதிய வைப்பதே இந்த நூலின் நோக்கம்.
‘Save the Planet’ என்ற தலைப்பில், நடாலியா மார்ஷல் எழுதிய ஆங்கில நூலை, எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கே.என்.ஸ்ரீனிவாஸ். ஒவ்வொரு அத்தியாத்திலும் உள்ள ‘யோசனை மூலை’, ‘அப்படியா!’, ‘சந்தேகப் பெட்டி’ போன்ற அம்சங்கள், பசுமையான சூழலை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தை அளிக்கும் _ சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சிறந்த பலனைத் தரும்.
புனித பூமியில் மனித தெய்வங்கள்
Author: Pathanjali
Publisher: Vikatan Publications
Product Code: MAVI333
To Buy - http://www.myangadi.com/punidha-boomiyil-manidha-theivangal-vikatan-publications

அறுதியிட்டுக் கூறமுடியாத, மிகவும் பழமை வாய்ந்தது இந்து சமயம். பாரோர் போற்றும் பண்பாட்டையும், கலாசாரத்தையும், வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயத்தின் அருமைகளும் பெருமைகளும் இன்றளவும் போற்றுதலுக்குரியதாக பிராகசிக்கக் காரணமானவர்கள், புண்ணிய பாரதத்தில் உதித்த ஞானிகளும், மகான்களும்தான். வேத காலம் முதலே நன்மை, தீமை தெரியாமல் தடுமாறும் மனிதகுலத்தை நெறிப்படுத்தி, வழிநடத்திச் செல்ல, இறைவன், ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித உருவில் இந்தப் பூவுலகில் தோன்றி, தன் வாழ்க்கை முறையாலும், உபதேசங்களாலும் மானிட சமுதாயத்தை வளம் பெறச் செய்து வழிநடத்துகிறார். வாழ்க்கையின் தத்துவத்தையும், இறைவனின் பெருமைகளையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள்&பாடல்கள் மூலம் மக்களிடம் பரப்பிய மகான்கள் நிறைய பேர். அவர்களில் வழிபாட்டுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்களாக உள்ள இருபத்தைந்து மனித தெய்வங்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும், மகத்துவங்களையும், மனித சமுதாயத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளையும் பற்றிய கட்டுரைகள், சக்தி விகடனில் ‘புனித பூமியில் மனித தெய்வங்கள்!’ என்ற தலைப்பில் தொடராக வந்தன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மகோன்னதமான மகான்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனைவருமே படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது.
புதிரா... புதையலா?
Author: Nagappan Pugazhendi
Publisher: Vikatan Publications
Product Code: MAVI468
To Buy - http://www.myangadi.com/pudhira-pudhaiyala-vikatan-publications

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை’. ஆகவே, நம் தேவைகளுக்குப் பொருள் ஈட்டத்தான் வேண்டும். சேமித்த பணம் நாம் தூங்கும்போதுகூட நமக்காக வட்டி ஈட்டவேண்டும் என்பது இப்போது பலருக்கும் விருப்பமான பொருளாதாரக் கொள்கை. அதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், எதில் அதிகமாகப் பணம் ஈட்டமுடியும்? அதிக ரிஸ்க் இருக்கும் வழிகளில் அதிகமாக வட்டி விகிதம் இருந்தாலும், போட்ட முதல் கொஞ்சம் தள்ளாடி கடைசியில் சராசரி வட்டி விகிதம்தான் வந்து சேரும். அதிகப் பாதுகாப்பைப் பார்த்தால் மூன்று வருடங்களுக்குப் பிறகு வரும் லாபமோ பணவீக்கத்தைவிடக் குறைவாக இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பங்கு மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்வதே சிறந்த வழி என்று தோன்றுகிறது. பங்கு மார்க்கெட்டில் உள்ள ஒரு நுட்பம், ‘ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்’. இதில் பங்குகளின் மதிப்பு ஷேர் மார்க்கெட்டைப் போல் அல்லாது, குறைந்தாலும் லாபம் பார்க்க முடியும். ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என்றால் என்ன, அதன் வகைகள் என்னென்ன என்ற அரிச்சுவடியிலிருந்து, அதன் உயர்ந்த நுணுக்கங்கள் வரை சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விவரித்திருக்கின்றனர்,