சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி
Author: Dr.T.Kamaraj
Publisher: Nalam Publications
Product Code: MANM081
To Buy - http://www.myangadi.com/sarkkarai-noikku-muttrupulli-nalam-publications
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் ஏன் வருகிறது? யார் யாருக்கு சர்க்கரை நோய் வரும்?
சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்னென்ன? சர்க்கரை நோயால் ஏற்படும் வேறு பிரச்னைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடைகள் உள்ளன. எதைச் சாப்பிட்டால், என்னென்ன வழிகளைப் பின்பற்றினால் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு சர்க்கரை நோயாளியிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியக் கையேடு.
சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி
Author: Dr.M.Marudhupandian
Publisher: Nalam Publications
Product Code: MANM027
To Buy - http://www.myangadi.com/sarkkarai-noi-samaalippathu-eppadi-nalam-publications
எந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?
நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?
அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?
நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?
நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?
கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?
- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.
நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்
Author: Dr.T.Kamaraj
Publisher: Nalam Publications
Product Code: MANM058
To Buy - http://www.myangadi.com/sarkkarai-noyaligalukku-varum-sex-pirachnaigal-nalam-publications
சர்க்கரை நோய் எப்படி உருவாகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன?
சர்க்கரை நோயால் என்னென்ன செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்?
இந்த நோய்க்கும் விறைப்பின்மைக்கும் தொடர்பு உண்டா?
உடலுறவுக் குறைபாடுகளை சர்க்கரை நோய் எவ்வாறு ஏற்படுத்துகிறது?
- இப்படி, சர்க்கரை நோய்க்கும், செக்ஸ் பிரச்னை-களுக்கு-மான தொடர்பு பற்றி மருத்துவ ரீதியாகத் தெளிவாக விளக்கு-கிறது இந்தப் புத்தகம். இந்த நோயால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும், செக்ஸ் கோளாறுகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களையும் எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தில், அவற்றுக்கான தீர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே சிக்கல்தான். அத்துடன், செக்ஸ் பிரச்னைகளும் சேர்ந்துகொண்டால் மனத்தளவில் ஒருவர் நொறுங்கிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி யாரும் நொறுங்கிப்போகாமல் இருக்க இந்தப் புத்தகம் உதவும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
Author: Dr.S.Muthu Chella Kumar
Publisher: Nalam Publications
Product Code: MANM039
To Buy - http://www.myangadi.com/sarkkarai-noyaligalukkaana-unavum-unvau-muraigalum-nalam-publications
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன?
நீரிழிவு நோய்க்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
நீரிழிவு நோயாளிகள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது?
சர்க்கரைக்கும் செயற்கை இனிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?
நீரிழிவு நோயாளிகளுக்கான மாதிரி உணவுகள் என்னென்ன?
உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு குளுக்கோஸ் சத்து இருக்கிறது என்பது குறித்த அட்டவணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
Author: Dr.S.Muthu Chella Kumar
Publisher: Nalam Publications
Product Code: MANM061
To Buy - http://www.myangadi.com/cholesterol-kuraippathu-eppadi-nalam-publications
கொழுப்பின் வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது நல்லதா? கெட்டதா? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னென்ன? கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன?
என்பது உள்ளிட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், நல்ல கொலஸ்ட்ராலை தேவையான அளவு பயன்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.