Friday, May 30, 2014

சிகரம் தொடுவோம்

சிகரம் தொடுவோம்

 Author: Nagappan Pugazhendi 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI477

To Buy - http://www.myangadi.com/sigaram-thoduvom-vikatan-publications 
 எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது; சிலவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது & இதுதான் கற்றலின் சித்தாந்தம். குறிப்பாக, பொருளாதாரம், சேமிப்பு, பங்கு வர்த்தகம்... இப்படி புதிது புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்துக்குத் தீனி போட இன்று நிறைய ஊடகங்கள் இருந்தாலும் எல்லோரும் கற்றுக்கொள்ள சிறந்த வழி, புத்தகம் எனும் அச்சு ஊடகம்தான். ஷேர் மார்க்கெட், சென்செக்ஸ் என்ற சொற்கள் சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், பணத்தைப் பெருக்க நினைப்பவர்கள் இந்தச் சொற்களைத் தவிர்த்து விட்டு பணம் பண்ண முடியாது. செய்தித்தாள் முதல் தொலைக்காட்சி வரை இதற்கென்று தனியாக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு பணம் புழங்கும் துறை இது. எளிமையாகப் பணம் சம்பாதிக்க இருக்கும் ஆயிரம் வழிகளில் பங்கு வர்த்தகமும் ஒன்று. இந்தத் துறை குறித்து அறியாதவர்களுக்காக ஆனந்த விகடனில் சிகரம் தொடுவோம் என்ற தலைப்பில், பங்கு வர்த்தகத் துறையில் புகழ் பெற்று விளங்கும் நாகப்பன்_புகழேந்தி இருவரும் ஒரு குழந்தைக்குக் கதை ர்.சொல்வது போல மிக எளிமையாக விளக்கி, தொடராக எழுதினார்.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



 

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி

 Author: Roald Dahl 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI154

To Buy - http://www.myangadi.com/charlie-matrum-chcolate-factory-vikatan-publications 
 சிறுவன் சார்லி _ சாக்லேட் என்றால் உயிர் இவனுக்கு. சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியைக் கடந்து தினமும் செல்லும் சார்லிக்கு அந்தத் தொழிற்சாலைக்குள் சென்று பார்வையிட வேண்டும் என்கிற அவா. ஒருசமயம், ஏதோ ஐந்து சாக்லேட்டுகளில் மட்டும் தங்க டிக்கெட் இருப்பதாகவும் அவை கிடைக்கப்பெறுபவர்களுக்கு வோன்காவின் ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றும் அறிவிப்பு வருகிறது. அந்த ஐந்து டிக்கெட்களும் ஐந்து சுட்டிகளிடத்தில் கிடைக்க, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஃபேக்டரியினுள் செய்யும் அமர்க்களங்களின் தொகுப்புதான் இந்தக் கதை.

அதுவும் சார்லியின் கையில் அந்த சாக்லேட் கிடைப்பது வரையிலான பகுதிகள் ருசியான சஸ்பென்ஸ். வார்த்தைக்கு வார்த்தை கதையின் அடுத்த கட்டத்தை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார் ரோல் தால். இதைப் படிக்கும் சுட்டிகள் ஒவ்வொருவருக்கும், ஃபேக்டரியைச் சுற்றிப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவங்கள், பரபரப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும். 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



சாந்தாஸ் சமையல்

சாந்தாஸ் சமையல்

 Author: Santha Jeyaraj 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI094

To Buy - http://www.myangadi.com/santha-s-samaiyal-vikatan-publications 

இன்றைய நவநாகரிக நங்கையரில் பலர் ‘சமையல் என்றாலே சங்கடமான சங்கதி’ என்று வெகு தூரம் ஓடுகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதையே கலையார்வத்துடன் கற்றுக்கொண்டு, சமைத்து அனைவரையும் அசத்தவும் செய்கிறார்கள். வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வேலைபார்க்கும் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் சமைத்துச் சாப்பிடுவதே உடலுக்கு உகந்தது. பர்ஸையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நாமே சமைத்துவிடுவதுதான். கண்டதைப் போட்டு வெந்ததைத் திண்பதைவிட, முறையாகக் கற்று கச்சிதமாக சமைத்து உண்பதும் உபசரிப்பதும், மற்றவரையும் மகிழ்வித்து நாமும் மகிழ வழிவகுக்கும். சமையல் கலையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்களும், அற்புதமான சமையல் வகைகளை இந்த நூலின் உதவியோடு கற்றுக் கொள்ளலாம். எல்லா சமையல் நூல்களையும் போல் இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சியாக, உணவின் தன்மையையும் அவற்றால் உடலுக்கு உண்டாகும் பயன்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துகளையும் விரிவாக விளக்கி ஆரோக்கியத்துக்கு வழி காட்டியுள்ளார் நூலாசிரியர் சாந்தா ஜெயராஜ்.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



சாக்கிய முனி புத்தர்

சாக்கிய முனி புத்தர்

 Author: Muruga Sivakumar 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI339

To Buy - http://www.myangadi.com/sakiya-muni-budhar-vikatan-publications 
 பாரதத்தின் புகழ், பெருமை இங்குத் தோன்றிய மகான்களாலும் சிறந்த அறிவுப் பொக்கிஷங்களாலும் பாரில் பரவியுள்ளது. மகரிஷிகளும் மகாபுருஷர்களும் அவதரித்த இந்த மண்ணில்தான் சாக்கிய வம்சத்தில் அரசாளும் உரிமையோடு அவதரித்தார் மகான் சித்தார்த்தர். ஏகபோக வாழ்வுக்கு வசதிகள் இருந்தும், எல்லை இல்லா செல்வமிருந்தும், மக்களைப் பற்றியும் அவர்களது இன்ப துன்பங்கள் பற்றியுமே சிந்தித்த சித்தார்த்தர், அதற்கு விடைகாண தன் வாழ்வையே அர்ப்பணித்து உலகம் போற்றும் புத்தரானார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற வார்த்தையை மெய்ப்பித்தது புத்தரின் வாழ்வு. அம்பினால் அடிபட்ட அன்னப் பறவையிடம் அவர் காட்டிய ஜீவகாருண்யமும், அரச வம்சத்தில் பிறந்தும் பணியாட்களோடு சரிநிகர் சமானமாய் உழவுசெய்த செயலும் அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். 



Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



சரியா? தவறா?

சரியா? தவறா?

 Author: N.Rajmohan (S.Gopal) 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI128

To Buy - http://www.myangadi.com/sariya-thavara-vikatan-publications

இது பெற்றோர்களுக்கான நூல்! அதாவது, எட்டு வயது முதல் பதினெட்டு வயது வரை உள்ள இளம் வளர் பருவம் மற்றும் வளர் பருவத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு! இப்படித்தான் குழந்தை வளரவேண்டும் என்ற எண்ணத்துடன், அதேசமயம், குழந்தையின் மனமும் கோணாமல், நம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குலைத்துக்கொள்ளாமல் இந்தப் பருவத்தினரை வளர்க்கவேண்டும். குழந்தையை வளர்த்த விதத்தை பிறர் மெச்சும்படி இல்லா விட்டாலும், குறைந்த பட்சம் பழி சொல்லாமலாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதோடு, தற்காலக் கல்வி, டீன் ஏஜ் வயதினரின் நடத்தை, அவர்களைச் சூழ்ந்துள்ள அபாயம் ஆகிய அனைத்துக்கும் ஈடுகொடுத்து அவர்களை வளர்ப்பது... சவாலான விஷயம்தான்! மேலே குறிப்பிட்டுள்ள குழந்தைகளை வளர்க்கும் யோசனைகளையும், அவற்றை நிறைவேற்றும் அத்தனை செயல் நுட்பங்களையும் இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் என்.ராஜ் மோகன். ஆங்காங்கே ‘கேஸ் ஸ்டடி’யும் இருப்பதால், அவர் சொல்ல வந்த கருத்தும் படிப்பவர்களின் மனதில் ஆணித்தரமாகப் பதிகிறது. குழந்தை வளர்ப்பில், சில அபாய கட்டங்கள் பொதிந்திருப்பதையும், காலம் கடந்தே அது தெரியவரும் என்பதையும் இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். 


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com