என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
Author: Sumathisri
Publisher: Vikatan Publications
Product Code: MAVI554
To Buy - http://www.myangadi.com/en-natkurippil-ezhuthappadatha-pakkangal-vikatan-publications
நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார்.
போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @
MyAngadi.com. All India Free Home Delivery*.
For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com

No comments:
Post a Comment