Monday, May 5, 2014

அமெரிக்காவின் சிம்மசொப்பனம் அசாஞ்சே

அமெரிக்காவின் சிம்மசொப்பனம் அசாஞ்சே

 Author: P.Muruganantham 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI543

To Buy - http://www.myangadi.com/americavin-simmasoppanam-asanche-vikatan-publications

‘அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும். அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பார்கள். அளவுக்கு அதிகமான அதிகாரக் குவியல்தான் அத்தனை அழிவுக்கும் காரணம். செல்வாக்கும் அரசியல் சக்தியும் பின்னால் இருக்கும்போது பெரிய ஆட்களும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர், அதைத் தட்டிக் கேட்க சாதாரண மக்கள் அஞ்சுகின்றனர். அசாதாரண மனிதர்கள்தான் அச்சம் விடுத்து அதிகாரத்தைக் கேள்வி கேட்பார்கள். அப்படி ஒருவர்தான் ஜூலியன் அசாஞ்சே! ஜூலியன் அசாஞ்சே விடலைப் பருவத்திலிருந்தபோது கணினியின் பால் ஈர்க்கப்பட்டு அதுவே கதி என்று கிடந்தார். புரொக்ராம்களை உடைத்து அதன் உள்ளே நுழைவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல். நாளாவட்டத்தில் ஹேங்கிங் எனப்படும் அடுத்தவர் கணினியில் நுழைந்து அங்கிருக்கும் செய்திகளை அவருக்கே தெரியாமல் பார்க்கத் தொடங்கினார். 

பின்னர் உலகெங்கிலும் உள்ள அரசு, ராணுவக் கணினிகளிலும் நுழைந்து ரகசிய விஷயங்களைத் தெரிந்துகொண்டார். பின்னர் விக்கிலீக்ஸ் என்னும் இணையத்தைச் சொந்தமாக ஆரம்பித்து அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய அத்துமீறல்களை அம்பலப்படுத்தினார். இதைப் போன்ற பல நாட்டு ‘அரசு ரகசியங்கள்’ எனப்பட்ட ஆனால் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ‘மறைக்கப்பட்ட’ விஷயங்களை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். கேவலத்தை வெளியே சொன்னால் கேவலத்தை நடத்தியவர்கள் ஒப்புக்கொள்வார்களா? அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பார்களா? இதுதான் அவர் வாழ்விலும் நடந்தது. சிக்கலில் மாட்டிக்கொண்டார். வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாரத்தைத் கேள்வி கேட்டவரின் அஞ்சாத வரலாறு இது! 

Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



No comments:

Post a Comment