Monday, May 5, 2014

அறிவின் தேடல்

அறிவின் தேடல்

 Author: Ma.Babu 
 Publisher: Vikatan Publications 
 Product Code: MAVI320

To Buy - http://www.myangadi.com/arivin-thedal-vikatan-publications

‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் ஆட்டுவிக்கிறான்; மனிதன் ஆடுகிறான்’ - இன்றைய மனித வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாத வசனங்களாகிவிட்டன. உலக உயிர்களின் தேடலில்தான் அதன் வாழ்வு அமைகிறது. அந்த வரிசையில், ஆறறிவு படைத்த மனிதனும் தன் வாழ்க்கைக்குரிய தேடலைத் தொடங்குகிறான். அதில் சில நேரங்களில் துவளும்போது, கடவுளையோ அதைச் சார்ந்த கொள்கைகளையோ துணைக்கு அழைத்துக் கொள்கிறான். அப்போதும் தோல்வி ஏற்பட்டால், அதையே விதி, கர்மம், பூர்வ ஜென்மத்து பலன் என்று, தன் இயலாமைக்கு தானே காரணம் சொல்லிக் கொள்கிறான். அறிவைத் தேடி மனித மனம் பயணிக்கும் பாதைகள்தான் விஞ்ஞானமும் மெய்ஞானமும். தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது, விஞ்ஞானம். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது, மெய்ஞானம். இரண்டுமே அறிவின் பயணங்களே.

 நடைமுறை வாழ்க்கையைக் காண நல்லதொரு வாய்ப்பை நல்கும் இந்த நூலில், நாம் யார், இந்த உலகம் எப்படி உருவானது, உலகத்து உயிர்களில் மனிதனின் நிலை என்ன, கடவுள், மனிதன், மதம், ஆன்மா, விதி, ஆவி, மறுபிறவிகள், மோட்சம், நரகம், சடங்குகள், கனவுகள், பேய்-பிசாசு, சகுனங்கள், ஜோதிடம் போன்றவற்றின் பின்னணி என்ன? - இப்படி, மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு வினாக்களுக்குரிய விடைகளை அறிவுபூர்வமான நிகழ்வுகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் மா.பாபு. மாய வாழ்க்கையின் திரையை சற்று விலக்கிப் பார்த்தால், நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை உணரலாம். மனித சிந்தனையில் எழும் ஐயங்களுக்கு விரிவான பதில் தரும் சரியான நூல்.


Buy Tamil Books Online | Tamil Books Online Shopping | Tamil Books Online Purchase @  MyAngadi.com. All India Free Home Delivery*. 

For any assistance, call us @ 083 441 43 220 (or) Mail Us @ support@myangadi.com



No comments:

Post a Comment